பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து
பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து பொள்ளாச்சி அருகே தன் மகளாக வளர்த்து வரும் பாசமான செல்லப்பிராணி பெண் நாய்க்கு ஏழு வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தி விவசாயக் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூர் பகுதியில் வசிப்பவர் சிவகுமார். விவசாயியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சுகன்யா என்ற மகளும், ஹரிஹரசுதன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2015.ஆம் ஆண்டு பொமேரியன் வகையான பெண் நாய் குட்டி ஒன்றை வாங்கி தன் வீட்டில் ஒருவராக எண்ணி வளர்த்து வந்தனர். செல்லபிராணிக்கு டாபு என்ற பெயர் வைக்கபட்டு வீட்டில் ஒரு மகளாக வளர்த்து வரும் மகாலட்சுமி, வீட்டில் தனியாக இருக்கும் போது துணையாகவும், தக்க பாதுகாப்பாகவும், பாசமாகவும், வீட்டின் காவலான நன்றியுடன் டாபு இருந்து வருகிறது. தற்போது டாபு பெண் நாய் கருவான பிறகு வளைகாப்பு செய்ய ஆசைபட்டு வந்தனர். இந்த நிலையில் பாசமாக வளர்த்த பெண் நாய் கருவான நிலையில் வளைகாப்பு நடத்தபட்டது. விவசாயி சிவக்குமார், மகாலட்சுமிக்கு நெருங்கிய ...