அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு! சிகாகோவில் 5 பேர் பலி! 16 பேர் காயம்1919048194
அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு! சிகாகோவில் 5 பேர் பலி! 16 பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வார இறுதியில் சிகாகோவில் பலவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 16 பேர் காயமடைந்துள்ளனர். இது நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் மேலும் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வார இறுதியில் இதுவரை சிகாகோ நகரம் முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது, வார இறுதியில் நகரில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்த நிலையில், ஒரு சம்பவத்தில், தெற்கு அல்ப...