Posts

Showing posts with the label #Working | #Father | #Blessing | #Me

தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்

Image
தந்தை மற்றும் மகனுடன் ஒன்றாக பணியாற்றியது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம்   ”அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘ஓ மை டாக்’ எனும் படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார். பிரைம் விடியோவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த திரைப்படம் கோடை பருவத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகிறது. ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான நல்லதொரு புரிதலை அடிப்படையாகக்கொண்ட ஃபீல் குட் கதையாக தயாராகி இருக்கிறது. இதனை அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் திரைப்படத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது. மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திர