பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து


பொமேரியன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் ... 7 வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து விருந்து


பொள்ளாச்சி அருகே தன் மகளாக வளர்த்து வரும் பாசமான செல்லப்பிராணி பெண் நாய்க்கு ஏழு வகையான சாப்பாட்டுடன் உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தி விவசாயக் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூர் பகுதியில் வசிப்பவர் சிவகுமார். விவசாயியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சுகன்யா என்ற மகளும், ஹரிஹரசுதன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 2015.ஆம் ஆண்டு பொமேரியன் வகையான பெண் நாய் குட்டி ஒன்றை வாங்கி தன் வீட்டில் ஒருவராக எண்ணி வளர்த்து வந்தனர்‌. செல்லபிராணிக்கு டாபு என்ற பெயர் வைக்கபட்டு வீட்டில் ஒரு மகளாக வளர்த்து வரும் மகாலட்சுமி, வீட்டில் தனியாக இருக்கும் போது துணையாகவும், தக்க பாதுகாப்பாகவும், பாசமாகவும், வீட்டின் காவலான நன்றியுடன் டாபு இருந்து வருகிறது.

 

தற்போது டாபு  பெண் நாய் கருவான பிறகு  வளைகாப்பு செய்ய ஆசைபட்டு வந்தனர். இந்த நிலையில் பாசமாக வளர்த்த பெண் நாய் கருவான நிலையில் வளைகாப்பு  நடத்தபட்டது. விவசாயி சிவக்குமார், மகாலட்சுமிக்கு நெருங்கிய சொந்தங்களை அழைத்து தன் மகளுக்கு செய்யும் முறையில் தயிர்,புளி,தக்காளி உள்ளிட்ட 7 வகையாக சாப்பாடு செய்து சீர் தட்டு வருசையுடன் உறவினர்கள் முன்னிலையில் பொட்டு வைத்து மலர் தூவி வளையல் போட்டு சாப்பாடு வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியுடன் நடந்தபட்டது.

 

தனக்கு பாதுகாப்பாகவும்,தங்கள் குடும்பத்தில் ஒரு வாரிசாக உள்ள டாபுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை பிறந்து நல்ல ஆயுலுடன் இருக்கவேண்டும் என வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

பெற்ற மகளுக்கு நடத்தபடும் வளைகாப்பு போல் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு நடத்த வேண்டும் என நினைத்து வளைகாப்பு நட்த்திய விவசாயி குடும்பத்தினர் பாச நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

 

Comments

Popular posts from this blog