ஒசூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய 30 போலிசார் பணியிடமாற்றம்1062677798


ஒசூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய 30 போலிசார் பணியிடமாற்றம்


கிருஷ்ணகிரி – பெங்களூர் நெடுஞ்சாலை அருகிலுள்ள சூளகிரியை அடுத்த கோபசந்திரம் பகுதியில், கடந்த 2ஆம் தேதி எருதுவிடும் விழா நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், இந்தாண்டு எருதுவிடும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கிறது.

அதன்காரணமாக எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி போலீஸார்மீது கல் வீச்சு, இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என தொடர்ந்தது. தொடர்ந்து பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதில் போலீசார், பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ‘ஓசூர் கலவரம் உளவுத்துறையின் தோல்வி’ என, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், திமுக அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கலவரத்தை தடுக்க முயன்ற காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 30 தனிப்பிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணி இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 30 பேர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று அந்தந்த காவல் நிலையங்களில் பொறுப்பேற்று கொண்டனர்.

அதன்படி, ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தலைமை காவலர் ஜெயவேல், மத்தூர்- முருகேசன், சிங்காரப்பேட்டை- அன்பழகன், கல்லாவி-அதியமான், சாமல்பட்டி- பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி தாலுகா-அல்லாவுதீன், கிருஷ்ணகிரி டவுன்- உதயகுமார், கே.ஆர்.பி.டேம்- சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் கந்திகுப்பம்-பாரூர், காவேரிப்பட்டணம்- உதயகுமார், குருபரப்பள்ளி- நவீத்பாஷா, வேப்பனப்பள்ளி - கிருஷ்ணன், மகராஜகடை- பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஓசூர் டவுன்- சுரேஷ்குமார், அட்கோ- பூங்காவனம், சிப்காட்- விஜயலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கெலவரப்பள்ளி அணையில் பொங்கும் ரசாயன நுரை; விவசாயிகள் வேதனை!


அதேபோன்று மத்திகிரி- செந்தில், பாகலூர்- அர்ச்சுனன், பேரிகை- சிங்காரம், சூளகிரி- பாக்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பர்கூர்- ஜேஸ்மின் மில்டன்ராஜ், கந்திகுப்பம்- கலையரசன், பாரூர்- விஜயன், நாகரசம்பட்டி- மூர்த்தி, போச்சம்பள்ளி- ஆனந்த்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேன்கனிக்கோட்டை- லட்சுமணன், தளி- விஜயகுமார், ராயக்கோட்டை- ராமச்சந்திரன், உத்தனப்பள்ளி- ராமச்சந்திரன், கெலமங்கலம்- ராஜசேகர், அஞ்செட்டி- சுதாகர் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 30 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog