ஒசூர் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய 30 போலிசார் பணியிடமாற்றம் கிருஷ்ணகிரி – பெங்களூர் நெடுஞ்சாலை அருகிலுள்ள சூளகிரியை அடுத்த கோபசந்திரம் பகுதியில், கடந்த 2ஆம் தேதி எருதுவிடும் விழா நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், இந்தாண்டு எருதுவிடும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியிருக்கிறது. அதன்காரணமாக எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி போலீஸார்மீது கல் வீச்சு, இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என தொடர்ந்தது. தொடர்ந்து பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் போலீசார், பொதுமக்கள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். ‘ஓசூர் கலவரம் உளவுத்துறையின் தோல்வி...