SRH: ‘தாராளமா கிளம்பலாம்’…நாடு திரும்பினார் வில்லியம்சன்: புது கேப்டன் இவர்தான்..காவ்யாவின் மெகா திட்டம்!


SRH: ‘தாராளமா கிளம்பலாம்’…நாடு திரும்பினார் வில்லியம்சன்: புது கேப்டன் இவர்தான்..காவ்யாவின் மெகா திட்டம்!


ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில்சன் ரைசர்ஸ் ஹைதராபாத்அணி முதல் 2 போட்டிகளில் படுமோசமாக சொதப்பி தோற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலின் டாப்பிற்கு சென்றது.

இப்படி சிறப்பாக செயல்பட்ட அந்த அணி, மீண்டும் படுமோசமாக சொதப்பி, அடுத்த 5 போட்டிகளில் தோற்று பரிதாப நிலைக்கு சென்றது. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க, அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மெகா வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த அணி, இறுதிவரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

10 சதவீத வாய்ப்பு:

இதன்மூலம் 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அணிக்கு 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்ல நேரடி வாய்ப்பு கிடையாது. கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மெகா வெற்றியைப் பெற்றால், 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்ல 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

வில்லியம்சன் விலகல்:

சன் ரைசர்ஸ் அணி இப்படி இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார். காரணம், வில்லியம்சனுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இதனால்தான் சென்றுள்ளார்.

வில்லியம்சன் சொதப்பல்:

இதுகுறித்து அவர் அணி நிர்வாகத்திடம் கூறியபோது, ‘தாராளமாகச் செல்லலாம்’ எனக் கூறிவிட்டார்களாம். இதற்கு பின்னணியில் பெரிய திட்டமும் இருக்கிறது. வில்லியம்சன் இந்த சீசனில் 13 போட்டிகளில் 93 ஸ்ட்ரேக் ரேட்டில் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிரடியாகவே விளையாடவில்லை. இதனால், அவரை அந்த அணி நிர்வாகம் கழற்றிவிட திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரே கிளம்பிவிட்டார்.

அடுத்த கேப்டன்:

இவருக்கு மாற்றாக அடுத்த போட்டியில் நிகோலஸ் பூரன்தான் கேப்டனாக இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரையே அடுத்த சீசனில் கேப்டனாக நியமிக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

Classic Crispy Fried Oysters

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

Phoebe Howard Design Light and Lovely Home Tour