சிம்பு என்கிட்ட சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு வல்லவன் படத்தில் நடந்த குழப்பம் குறித்து பேசிய சந்தியா!


சிம்பு என்கிட்ட சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு வல்லவன் படத்தில் நடந்த குழப்பம் குறித்து பேசிய சந்தியா!


சினிமாவில் எத்தனை துறைகள் உள்ளதோ அத்தனை பற்றியும் அக்கு வேறு ஆணிவேராக அறிந்தவர் நடிகர் சிம்பு சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் வெற்றி தோல்வி என அனைத்தையும் மாறி மாறி கண்டு வரும் சிம்பு சில படங்களை இயக்கியும் உள்ளார் அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் என்ற படத்தை சிம்பு இயக்கி நடித்து இருப்பார். சிம்பு-நயன்தாரா, ரீமா சென்,சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் என பல நடித்திருந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. மலையாள நடிகையாக இருந்தாலும் முதல் படத்திலேயே நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சந்தியா அடுத்தடுத்து படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். வல்லவன் படத்தில் சிம்புவுக்கு தோழியாக நடித்து அனைவரது மனங்களையும் வென்றிருந்தார்

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி உள்ள சந்தியா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வல்லவன் படத்தில் நடித்தது குறித்து ஓபனாக பேசியுள்ளார். சிம்பு இயக்கி நடித்திருந்த வல்லவன் 2006 ஆம் ஆண்டு வெளியானது.

நட்பு, காதல் என இரண்டையும் மிக அழகாக கூறியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வல்லவன் இதில் நடிப்பதற்காக அவர்கள் சொன்ன கதையையே எடுக்கல. வீட்டில் வந்து அவர்கள் சொன்ன கதை வேறு, அதை அப்படியே படப்பிடிப்புக்கு செல்லும்போது மாறியது.. அப்புறம் படம் வெளியாகும்போது கம்ப்ளீட்டா வேற மாதிரி கதையில ரிலீஸ் ஆச்சு வல்லவன் கதை என் கிட்ட சொன்னத சொன்னா நீங்க அது வேற படம் மாதிரி இருக்குன்னு சொல்லுவீங்க. என நடிகை சந்தியா வல்லவன் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட கதை வேறு நடித்த கதை வேறு என்ற பகீர் தகவலை தனியாக யூடியூப் சேனல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

The Best Marinated Mushrooms Recipe

Shirley Temple Party Punch