விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா… செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகர்கள்…


விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா… செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகர்கள்…


விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் நயன்தாரா பொங்கல் வைத்து வழிபட்டார். நயன்தாராவுடன் ரசிர்கள் உற்சாகம் பொங்க செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஆண்டுக்கணக்கில் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் எப்போது செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளன. விக்னேஷும் நயன்தாராவும், கடந்த சில வாரங்களில் முக்கிய கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

சமீபத்தில் இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்டவைகளுக்கு சென்று வழிபட்டனர். பஞ்சாபில் சீக்கிய குருத்துவாராவிற்கு இவர்கள் சென்று வழிபட்ட புகைப்படங்கள் வைரலாகின.

இதையும் படிங்க - விலை உயர்ந்த வாட்ச் பரிசு… யுவன் சங்கர் ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி

இந்நிலையில் தனது வருங்கால கணவர் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலுக்கு சென்ற நயன்தாரா அங்கு பொங்கல் வைத்து வழிபட்டார். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க - 2 நாட்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த வாடிவாசல் பாடல்… லெஜண்ட் சரவணனுக்கு குவியும் பாராட்டு

நயன்தாரா வருகிறார் என்ற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், வழுத்தூரில் குவிந்தார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. முன்னதாக தஞ்சைக்கு வருவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நயன்தாரா திருச்சிக்கு சென்றார்.

விமான நிலையத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அடுத்த மாதம் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கும் 62-வது படத்தை இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Comments