நடிகர் கார்த்தியுடன் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


நடிகர் கார்த்தியுடன் இணையும் சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குனர் நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் இணைகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் செப்டம்பர் 30ம்தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸாகிறது.

இதைத் தொடர்ந்து இரும்புத் திரை படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் வசூலில் மினிமம் கேரன்டியை கொடுக்கும் என்பதால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க - எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 99 சதவீத மதிப்பெண்… பிரபல நடிகை அசத்தல்

இதன் தொடர்ச்சியாக நெஞ்சுக்கு நீதி படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க - விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் இதுதான்… ரசிகர்கள் திருப்தி

இதுதொடர்பான முதற்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

உதயநிதி நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியில் வரவேற்பை பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் தான் இந்த நெஞ்சுக்கு நீதி என்றாலும், தமிழ்நாட்டின் மண்ணிற்கு ஏற்ப அருண்ராஜா காமராஜ் கதையை கட்டமைத்திருப்பார்.

இந்நிலையில் அடுத்த கட்டமாக அவர் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

22 Awesome Amazon Finds to Help Make Life Easier

The Best Marinated Mushrooms Recipe

Shirley Temple Party Punch