இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!


இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!


மத்தியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திதான் இணைப்பு மொழி, இந்திதான் தேசிய மொழி எனும் அஸ்திரத்தை நேரடியாகவோ மறைமுகவோ தொடுப்பது வழக்கம். அதற்கு எதிராக தெற்கில் இருந்து பல அம்புகள் தொடுக்கப்படும். அந்த அம்புகள் வடக்கில் இருந்து வரும் அஸ்திரத்தை பிளந்து சென்று ‘இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனும் சேதியை (மீம் கிரியேட்டர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா ) சொல்லிவிடும். டைம் லூப்பில் நடப்பது போல் இதுவே மீண்டும் மீண்டும் ரிப்பீட் அகும்!

ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதில் இருந்தே இந்த ஆண்டுக்கான இந்தி திணிப்பு சர்ச்சை சீறும் சிறப்புமாக தொடங்கிவிட்டது. பொதுவாக அரசியல் ஆளுமைகளின் இதுபோன்ற கருத்துகளையெல்லாம் எதிர் தரப்பு கட்சிகள் தான் ‘டீல்’ செய்துகொள்வார்கள். திரைப்பிரபலங்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ‘இது உங்க பிரச்சன குமாரு..நங்க உள்ள பூந்தா கேங் வாரா மாறிடும்’ என்பது போல் அமைதியாக கடந்துவிடுவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரை பிரபலங்களே ‘பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா!’ என ஆவேசத்துடன் சங்கிலியை அறுத்துக்கொண்டு ட்விட்டர், பேஸ்புக் என தங்களுக்கு வாகுவாக உள்ள இடங்களில் எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog