பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன?68850937
பெருமை பேசி திரியாதீர்கள்.. எழவே முடியாத அளவுக்கு ஏழரை சனி தட்டி வைப்பார்! ஆன்மீகம் சொல்வது என்ன?
சென்னை: சிலருக்கு எதைப்பற்றியாவது பெருமையாக பேசாவிட்டால் தூக்கம் வராது. சொத்து சுகம் பற்றி சிலர் பேசுவார். பணத்தைப் பற்றி சிலர் பேசுவார்கள். குடும்பத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் பெருமை பேசுவார்கள். இப்படி பெருமையாக பேசி ஆணவத்தில் ஆடுபவர்களின் தலையில் நச்சென்று குட்டி உட்கார வைப்பாராம். ஜாதகத்தில் எங்கு சனி இருந்தால் எதைப்பற்றி பெருமையாக பேசக்கூடாது என்று பார்க்கலாம்.
30 ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள் இல்லை 30 ஆண்டுகாலம் தாழ்ந்தவர்கள் இல்லை என்பார்கள். ஒருவரின் ஆயுளில் சனி பகவானின் பங்கு முக்கியமானது. 30 ஆண்டுகால சனியின் பயணம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சுய ஜாதகத்தில் சனி 3,6,10,11 இடங்களில் இருந்தால் அது அற்புதமான பலன்களைத் தரும். ரிஷபம் லக்னகாரர்களுக்கு 10, 7 ஆம் இடத்தில் சனி இருந்தால் அதிர்ஷ்டகரமான இடமாக இருக்கும்
ஆணவத்தோடு ஆடுபவர்களின் தலையில் சனி தட்டி வைப்பார். எனவேதான் ஏழரை சனி காலத்திலும், சனி தசை காலத்திலும் அதிகம் ஆட்டம் போடாதீர்கள். ஆணவத்தினால் பாதிப்பு வரும்.
முக அழகு பாதிக்கும்
ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளவர்கள் அழகு சாதன பொருட்களை உபயோகிக்க வேண்டாம், குறிப்பாக முக அழகு சாதன பொருட்களை நிச்சயம் உபயோகிக்க கூடாது, இயற்கையாக முகத்தை பேணி பாதுகாப்பதே நன்மை. தன்னுடைய அழகைப் பற்றி தானே பெருமையாக பேசினால் ஏழரை சனி காலத்தில் முகத்தில் தேமல் பாதிப்புகள் வரும்.
சனி தரும் சோதனை
2ஆம் வீட்டில் சனி இருந்தால் ஜாதகத்தை ஆய்வு செய்து உரிய தெய்வத்தை தேர்வு செய்து அதற்கு உரிய பீஜ மந்திரத்தை அல்லது சுலோகத்தை தினமும் உச்சரித்து வரவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி அதிகம் பெருமையாக பேசி சுய தம்பட்டம் அடிக்கக் கூடாது.
சண்டை வரும்
3ஆம் வீட்டில் சனி இருந்தால் உங்கள் முயற்சிகளை பற்றிய பெருமிதம் கூடாது, அதாவது வெளியில் கூறி பெருமை பேச கூடாது, உறவினர்களிடம் எக்காரணம் கொண்டும் ஆடம்பரமாக ஜம்பம் செய்ய கூடாது. அப்படி பேசினால் அந்த காரியம் வெற்றியடையாது. உடன் பிறந்தவர்கள் பற்றியும் நண்பர்கள் பற்றியும் பெருமையாக கூறக்கூடாது சண்டை வரும். அப்புறம் சொத்து பிரிவினை ஏற்படும்.
வீடு வாகனம் பெருமை வேண்டாம்
4ஆம் வீட்டில் சனி பகவான் பயணம் செய்தால் சொந்த வீடு, வாகனம் போன்ற பொருள்களைப் பற்றி பெருமையாக அடுத்தவரிடம் கூறக்கூடாது. அதிகம் அலங்கரிக்க வேண்டாம், இயற்கையாக பரமாரிப்பதே சிறந்தது, அடிக்கடி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள், அம்மாவின் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். வீடு, வாகனம் பற்றி பெருமை பேசாதீர்கள். அப்புறம் சனிபகவான் பறித்துக்கொள்வார்.
அடுத்தவருக்கு உதவுங்கள்
5ம் வீட்டில் சனி இருந்தால் மற்றவரை அதைரியம் செய்தலாகாது, தந்தைக்கு உரிய மரியாதை கொடுங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டில் சனி இருந்தால் மாதம் ஒரு நாழிகையாவது பொது சேவை செய்ய வேண்டும், இந்த சேவையானது வாயில்லா ஜீவனுக்கு உணவளிப்பது, மருத்துவமனையில் இருப்பவருக்கு உடலால் உதவுவது போன்ற வழியில் மேற்கொள்ளுங்கள்
7ஆம் வீட்டில் சனி இருந்தால் அனைத்து காரகங்களிலும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் நண்பர்கள்,வாழ்க்கைத்துணை, தொழில் கூட்டாளி போன்றவர்களை ஏமாற்றவோ, ஒருதலை பட்சமாகவோ நடந்து கொள்ள கூடாது. வாழ்க்கைத்துணை பற்றி எந்த காரணத்தைக் கொண்டும் அடுத்தவரிடம் பேச வேண்டாம்.
கறுப்பு நிற வேண்டாம்
சுய ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் சனி அமைந்திருந்தால் உள்ளாடைகளில் கருப்பு நிறத்தை தவிருங்கள், நீங்கள் அவமானத்தை சந்தித்தாலும் அடுத்தவரை அவமானம் செய்ய கூடாது, அடுத்தவரின் சொத்து/பொருட்களை பரிக்கவோ, உபயோகிக்கவோ கூடாது, சமூகத்துக்கு புறம்பான குற்றங்கள் புரிந்தவர்கள் நற்பாதைக்கு திரும்ப உதவுங்கள்.
பணம் பற்றி பெருமை கூடாது
9ம் வீட்டில் சனி இருந்தால் உங்கள் சேமிப்பு மற்றும் வங்கி விபங்களை பெருமையாக வெளிப்படுத்த கூடாது, ஆன்மீகம் மற்றும் தெய்வ வழிபாடுகளை பற்றிய பெருமை அல்லது விளம்பரம் செய்து கொள்ள கூடாது, தந்தையை எக்காரணம் கொண்டும் அவமரியாதை செய்ய கூடாது.
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதீர்கள்
10ஆம் வீட்டில் சனி இருந்தால் அது கர்ம சனி என கர்ம காரியங்களை ஒழுங்காக செய்ய வேண்டும். தொழிலாளர்கள். உழைப்பவருக்கு மரியாதை கொடுங்கள்/உதவுங்கள், இடுப்புக்கு கீழ் கறுப்பு நிற ஆடை அணிவதை தவிருங்கள். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சனி இருந்தால் அடுத்தவர் முன்னேறுவதை பார்த்து நீங்களும் முயற்சிக்காதீர்கள், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதரர்கள் பற்றி பெருமை பேச வேண்டாம்.
உறக்கம் பறிபோகும்
12ஆம் வீட்டில் சனி இருக்க செலவு பற்றி பெருமை பேசாதீங்க. படுத்த உடனே தூங்குவேன் என்று சொல்லக்கூடாது. தூக்கம் இல்லாதவர்களின் வயிற்றெரிச்சலால் உங்கள் தூக்கம் பறிபோகும். கால்களில் கருப்பு நிற செருப்பு/ஷூ அணிய கூடாது, தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள், கால் இல்லாதவருக்கு செயற்கை கால் வாங்கிக்கொடுங்கள், உறங்கும் அறையில் நிச்சயம் கருப்பு நிறம் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
Comments
Post a Comment