``ஆளுநர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை!"- டிடிவி தினகரன்


``ஆளுநர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாதது தவறில்லை!"- டிடிவி தினகரன்


தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற தமிழக ஆளுநர் தேநீர் விருந்தை திமுக உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் இத்தகைய புறக்கணிப்புக் குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தும், அதற்கு எதிராக வந்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் விவாதமானது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுங்கட்சி, ஆளுநர் இடையே நிலவும் சூழல், ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது பேசிய தினகரன், ``பேரறிஞர் அண்ணா, ஆட்டுக்கு தாடி போல, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்னார்கள். அவர் வழி வந்தவர்கள் நாங்கள். தி.மு.க எதிர்க்கிறது என்பதற்காக, நாங்க தி.மு.க-வுக்கு எதிர்ப்பா சொல்லவேண்டிய அவசியமில்லை. சட்டசபையில் மக்களின் பிரநிதிகள் நிறைவேற்றுகின்றனவற்றை, ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்ப வேண்டியது அவர்(ஆளுநர்) கடமைஎன்று நினைக்கிறோம். மாநிலத்துக்கு தேவையானவற்றை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தவதற்கான செயல்களை கவர்னர் செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து" என கூறினார்.

மேலும் தி.மு.க குறித்து பேசுகையில், ``தி.மு.க வெளிநடப்பு செய்யும், அப்புறம் போய் கவர்னர பாப்பாங்க.. ஆளுநர் தேநீர் விருந்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது தவறில்லை என்று தான் நினைக்கிறேன்" என தினகரன் பேசினார்.

Comments

Popular posts from this blog